வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க வலியுறுத்தி வாகன பேரணி

வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி.

Update: 2024-04-10 04:52 GMT

வாகன பேரணி

சேலம் அழகாபுரம் பகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து 50-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது. இந்தப் பேரணியை கலெக்டர் பிருந்தா தேவி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி சேலம் பேர்லேண்ட்ஸ் காவல் நிலையம் அருகில் தொடங்கி ஐந்து சாலை வழியாக மீண்டும் காவல் நிலையம் சென்றடைந்தது. இப்பேரணியில் மாற்றுத்திறனாளிகள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாற்றுத் திறனாளிகள், வயதானவர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்குப்பதிவிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வரும் மக்களவைத் தேர்தலில் தங்களது வாக்குப் பதிவினை 100 சதவீதம் செலுத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மாநகராட்சி செயற் பொறியாளர் பழனிசாமி, தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் ரவிச்சந்திரன், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News