காங்கேயம்-திருப்பூர் சாலையில் வாகன ஈ நெரிசல்

காங்கேயம் திருப்பூர் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குழி தோண்டுவதால் இடையூறு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-05-09 09:41 GMT

போக்குவரத்து நெரிசல்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம்-திருப்பூர் சாலையில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் சாலை பரிக்கப்பட்டு குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. குழாய் அமைக்கும் பணி நடைபெறும் காங்கேயம்-திருப்பூர் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ளதால் வாகனங்கள் செல்லாதவாறு பணியாளர்கள் பேரிகேட் கொண்டு அடைத்துள்ளனர். இதனால் வாகனங்கள் அனைத்தும் எதிரெதிர் திசையில் ஒரே பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. காங்கேயம்-திருப்பூர் சாலை அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பிரதான சாலையாகும். மேலும் அதிகமான வாகனங்கள் ஒரே பாதையில் எதிரெதிர் திசையில் செல்வதால் போதுமான இடமில்லாமல் கனரக வாகனங்கள் செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல கால தாமதமாககவும் கூட்ட நெரிசலாகவும் சாலை காணப்படுகிறது. முக்கியமாக காலை 7 மணியிலிருந்து 10 மணி வரை மற்றும் மாலை 4 மணியிலிருந்து இரவு சுமார் 10 மணி வரையிலும் போக்குவரத்து அதிகமாக இருப்பதனால் மக்கள் திருப்பூர் சாலை வாய்க்கால் மேட்டு பகுதியில் இருந்து காங்கேயம் பேருந்து நிலையம் வரையிலும் கடந்து செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் எதிரெதிர் திசையில் வாகனங்கள் செல்வது விபத்து ஏற்பட வழிவகுக்கும் எனவே சாலையில் பணியை விரைந்து முடிக்க இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News