ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வீட்டில் கொள்ளை : எஸ்.பி. நேரில் விசாரணை..!

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை நடத்தினார்.

Update: 2023-10-21 06:04 GMT

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் கொள்ளை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வேலூர் மாவட்டம் காட்பாடி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 26.5 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், "காட்பாடி ஏரிமுனை பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியம் ஆரிய குடியிருப்பில் வசிப்பவர் சுகுமார். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.  இவருடைய மனைவி சத்திய ஜீவகுமாரி. இவர் வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலை சுகுமார் வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய மனைவியை மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு அழைத்து சென்றார். அங்கு பள்ளியில் அவரை விட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 26.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ 2.5 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.  பின்னர் இது குறித்து சுகுமார், காட்பாடி போலீசில் புகார் அளித்தார். தகவல் அறிந்த வேலூர் மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, கொள்ளை நிகழ்ந்த  வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அப்போது காட்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி, காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் காவல்துறையினர்  உடன் இருந்தனர்.  அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வரும் காவல்துறையினர்,  மர்ம ஆசாமிகள் சுகுமாரின் வழக்கமான நடவடிக்கையை நோட்டமிட்டு அவர் வெளியே சென்ற போது நகை, பணத்தை திருடி சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

Similar News