வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக அலுவலகம் திறப்பு

வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக அலுவலகத்தை மாவட்ட பொறுப்பாளர் வாலாஜாபாத் கணேசன்,வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே மோகன் திறந்து வைத்தனர்.

Update: 2024-01-14 15:21 GMT

அதிமுக அலுவலகம் திறப்பு

 திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே வயலூர் கிராமத்தில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் அதிமுக அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி மற்றும் கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் வயலூர் ராமநாதன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மற்றும் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

பின்னர் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அதிமுக கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் தொகுப்பான வேட்டி சேலை கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்புகளை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக கழக நிர்வாகிகள் மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஜாகிர் உசேன் ஒன்றிய செயலாளர்கள் திருமூலன், துரை, அரங்கநாதன் நகர செயலாளர் வெங்கடேசன், மாவட்ட கழக நிர்வாகிகள் ரகு, பாலன், ராணி பெருமாள்,கன்னியப்பன், அருண்குமார், அரவிந்தன், நகர அவைத் தலைவர் ஜனார்த்தனன் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சிவா, ஒன்றிய கவுன்சிலர் ராஜ் கணேஷ், சுரேஷ், தூசி தலைவர் வெற்றிச்செல்வன் ராஜ்மோகன், மோகன் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News