வேங்கை வயல் விவகாரம்: ஆயுதப்படை பயிற்சி காவலர் விசாரணை நிறைவு

வேங்கை வயல் விவகாரத்தில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜாவிடம் சி பி சி ஐ டி போலீஸாரின் விசாரணை நிறைவு பெற்றது.

Update: 2024-05-23 17:17 GMT

பயிற்சி காவலரிடம் விசாரணை நிறைவு

வேங்கை வயல் விவகாரத்தில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜாவிடம் சி பி சி ஐ டி போலீஸாரின் விசாரணை நிறைவு ஏழரை மணி நேரம் விசாரணைக்கு பின் அவர் அனுப்பி வைக்கப்பட்டார் கூடுதலாக இரண்டு நபர்களிடம் இரு தினங்களில் விசாரணை செய்வதற்கு சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

   தேவைப்பட்டால் முரளி ராஜாவிடம் மீண்டும் விசாரணை செய்யப்படும் வழக்கு விரைவில் முடிக்கப்படும் என்று நம்பிக்கை உள்ளது நீதிமன்றம் அளித்துள்ள காலக்கெடுக்குள் வழக்கு முடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது விசாரணை துரிதப்படுத்தியுள்ளது.

சிபி சிஐடி எஸ்பி கல்பனா தத் தகவல் வேங்கை வயல் விவகாரத்தில் அதே ஊரைச் சேர்ந்த காவலர் முரளி ராஜாவிருக்கு சிபிசிஐடி போலீசார் அனுப்பிய நிலையில் இன்று காலை முரளி ராஜா புதுக்கோட்டையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் ஆனார் அவருடன் மூன்று வழக்கறிஞர்கள் வந்தனர் ஆனால் வழக்கறிஞர்களை அலுவலகத்திற்குள் சிபி சிஐடி காவல்துறையினர் அனுமதிக்கவில்லை சி பி சி ஐ டி டிஎஸ்பி கல்பனா தத் தலைமையில் ,

10க்கும் மேற்பட்டோர் முரளி ராஜாவிடம் காலை 11 மணியிலிருந்து இரவு 7 மணி வரை ஏழரை மணி நேரம் தொடர்ந்து விசாரணை செய்தனர் இதில் பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பாக சம்பவ தினத்தன்று,

இவர் தன்னுடைய வாட்ஸ் அப்பில் பலருக்கு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அனுப்பியுள்ளார் மேலும் இவர் அனுப்பிய தகவல் மெசேஜ் ஒப்பிட்டு பார்த்து தான் இவருக்கு ஏற்கனவே குரல் மாறி பரிசோதனை எடுக்கப்பட்டது மேலும் இவரிடம் தொடர்பில் இருந்த மூன்று நபருக்கு கடந்த வாரம் சென்னையில் உள்ள சோதனை மையத்தில் குரல் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது இந்த நிலையில் இவரது குரல் மாதிரி ஒத்துப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது இந்த தகவல் தொடர்பாக தான் அவரிடம் பல முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாகவும்,

இதில் பல்வேறு வாக்குமூலங்கள் அவரிடம் பெறப்பட்டதாகவும் தெரிகிறது இவருடைய வாக்கு மூலத்திலிருந்து இவர் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டதும் உறுதியாகி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது மேலும் இரு தினங்களில் கூடுதலாக இரண்டு நபர்களிடம் விசாரி நடத்துவதற்காக சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர் இரவு 7 மணிக்கு விசாரணை முடிவுற்று முரளி ராஜாவை அவரது வழக்கறிஞர்களோடு சிபி சிஐடி போலீசார் அனுப்பி வைத்தனர் இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத் பேசுகையில் இன்றைய தினம் விசாரணை முடிந்து,

முதலில் ராஜாவை அனுப்பியுள்ளோம் தேவைப்பட்டால் மீண்டும் அவரை அழைத்து விசாரணை செய்வோம் விசாரணை உரிய முறையில் நடைபெற்று வருகிறது விரைவில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் மூன்று பேருக்கு குரல் மாறி பரிசோதனை செய்த முடிவுகள் இதுவரை வரவில்லை நீதிமன்ற கொடுத்த காலக்கெடுவுக்குள் விசாரணை,

முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம் இருப்பினும் கிடைக்கக்கூடிய சாட்சிகள் எவிடென்ஸ்கள் ஆகியவற்றை பொறுத்து வழக்கு முடிவுக்கு வரும் காலம் நிர்ணயிக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News