வேங்கைவயல் விவகாரம்: சிபிசிஐடி விசாரணை

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-23 12:51 GMT
வேங்கைவயல் விவகாரம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கை 493 நாட்களாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் இதுவரையில் 221 நபர்களிடம் நேரடி சாட்சியங்களும் 31 பேரிடம் டிஎன்ஏ மாதிரி பரிசோதனையும் 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படும் நிலையில் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மணமேல்குடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் முரளிராஜா விசாரணைக்கு இன்று நேரில் புதுக்கோட்டை நிஜாம் காலனி அலுவலகத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

Tags:    

Similar News