திருவட்டார் ஆஞ்சனேய சுவாமி கோவிலில் நாளை வித்யாரம்பம்
திருவட்டார் ஆஞ்சனேய சுவாமி கோவிலில் நாளை வித்யாரம்பம் நிகழ்வு நடைபெறுகிறது.
திருவட்டார் ஆஞ்சநேயசுவாமி கோவிலில் நவராத்திரி பூஜையையொட்டி நேற்று துர்க்காஷ்டமி கொண்டாடப்பட்டது. கணபதி ஹோமம், கொலுபூஜை, ,புத்தகங்களை பூஜைக்கு வைத்தல், நவராத்திரி பஜனை, கூட்டுப்பொங்காலை வழிபாடு, பால கன்னிகா பூஜை, தீபாராதனை ஆகியன நடந்தது. இன்று மகா நவமி கொண்டாடப்படுகிறது.
காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்தைத்தொடர்ந்து மகா சண்டிகா ஹோமம், 21 நாராயணீய சமிதி மகளிர் இணைந்து நடத்தும் தேவி மகாத்மிய பாராயணம், 12. 30 மணிக்கஸ்வதி தேவிக்கு குங்கும அர்ச்சனை, மாலை 4.30 மணிக்கு நவராத்திரி பஜனை, இரவு 7 மணிக்கு வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீட சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ் தலைமையில் பரிசளிப்பு விழா, இரவு 8 மணிக்கு ஆஞ்சநேயா தீர்த்தம் நாட்டியாஞ்சலி ஆகியன நடக்கிறது. நாளை காலை 10 மணிக்கு ஆஞ்சநேயசித்தர் தலைமையில் எழுத்தறிவித்தல் (வித்யாரம்பம்), தொடர்ந்து பூஜை எடுத்தல், தீபாராதனை, தொடர்ந்து நாரிபூஜையுடன் விழா நிறைவடைகிறது.