எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்த விஜய பிரபாகரன்
குன்னத்தூர் அம்மா கோவிலில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து தேர்தல் வெற்றிக்காக விஜய பிரபாகரன் பிரார்த்தனை செய்தார்.
அதிமுக கூட்டணி சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற வேட்பாளராக விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார் .இதனை தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் உள்ள கல்லுப்பட்டி ஒன்றியத்தில் அவருக்காக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் . முன்னதாக டி குன்னத்தூர் உள்ள அம்மா கோவிலில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலைகளுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் விஜய பிரபாகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.இதனை தொடர்ந்து விஜய பிரபாகரன் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் சிலை முன்பு வெற்றி பெற பிரார்த்தனை செய்தார்.
தொடர்ந்து பிரச்சாரத்தில் பேசியதாவது புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா, புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஆகியோகளின் அருளாசியுடன் ,எடப்பாடியார், பிரேமலதா அம்மா, கிருஷ்ணசாமி மற்றும் கூட்டணி கட்சியின் ஆசியோடு இன்று விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதில் உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன் டி.கல்லுப்பட்டி எனக்கு ஒன்றும் புதிது அல்ல ஏனென்றால் அடிக்கடி கல்லுப்பட்டிக்கு வருகை தந்துள்ளேன் ஏனென்றால் எனது சகோதரனின் படப்பிடிப்பு இங்கு தான் நடந்தது.
நான் எனது சொந்தத் தகுதிக்கு வேட்பாளராக வந்து நிற்கிறேன் ஏனென்றால் விஜயகாந்த் விருதுநகரில் பிறந்து மதுரையில் வாழ்ந்து சென்னையில் மறைந்தார். ஆனால் அவருடைய மறைவுக்கு பின் மக்களுக்கும் எங்களுக்குமான பந்தம் முடிந்து விடுமோ என்று பயந்தேன் ஆனால் தற்போது சென்னையில் பிறந்து மதுரை வந்து விருதுநகரில் இன்று போட்டியிடுகிறேன். மக்களுக்காக வெற்றி பெற்று சேவை செய்ய தயாராக இருக்கிறோம்.
ஆளும் திமுக அரசு எத்தனையோ வாக்குறுதிகளை கூறி நிறைவேற்றாமல் உள்ளது நம்முடைய இலக்கு 2026 நம்முடைய தொடக்கம் 2024 இந்த பாராளுமன்றத் தேர்தலில் தொடங்கியுள்ளது கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புங்கள். 2026 மீண்டும் எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் அதற்கு மக்களாகிய நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம் உங்கள் குறைகளை என்னுடைய குறை போல் நினைத்து நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன் என்னை நீங்கள் தேர்வு செய்து வெற்றி பெற வைத்தால் இதே தொகுதியில் வீடு எடுத்து தங்கி மக்களுக்கு சேவை செய்வேன் என என் தாயிடம் கூறியதால் எனக்கு இந்த தொகுதியில் சீட்டு கொடுத்துள்ளார்
எனது தந்தை விஜயகாந்த் மறைவிற்குப் பின் என் தாய் தான் கூட இருக்கிறார்கள் அதே போல் நீங்களும் என்னை பார்த்துக் கொள்ள வேண்டும் ஏப்ரல் 19 வரை நீங்கள் என்னை பார்த்துக் கொள்ளுங்கள் ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு நானும் ஆர் பி உதயகுமார் அவர்களும் உங்களைப் பார்த்துக் கொள்கிறோம் துளசி கூட வாசம் மாறும் ஆனால் இந்த தவசி புள்ள வாக்கு மாற மாட்டேன் எனவே எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்என கூறினார்.