விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், இருவரும் ஆஜராகாத நிலையில் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழக்கை ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்...
தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்தை விட 35 கோடியே 79 லட்ச ரூபாய் கூடுதலாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதுக்கோட்டை மாவட்டம் அமர்வு நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் நிலையில் 15 வது முறையாக இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ள 15 ஆயிரம் பக்கங்கள் கொண்ட சொத்து ஆவணங்கள் அனைத்தும் தங்களுக்கு வேண்டுமென ஏற்கனவே அமலாக்கத்துறை இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா இருவரும் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கில் விஜயபாஸ்கர் தரப்பில் அவரது மனைவி ரம்யாவை விடுவிக்க வேண்டும், தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்பது தொடர்பான மனுவும், அமலாக்க துறையினருக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை கொடுக்கக் கூடாது என்பது தொடர்பான மூன்று மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையை தொடர்ந்து வழக்கு வரும் ஜூன் 12-ம் தேதிக்கு ஓத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்...