விஜயகாந்த் பணத்திற்கு ஆசைப்படாத சிறந்த மனிதர்: நடிகர் கோபி காந்தி

புரட்சி கலைஞர் விஜயகாந்த் பணத்திற்கு ஆசைப்படாத சிறந்த மனிதர் என நடிகர் கோபி காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2023-12-29 08:48 GMT

நடிகர் கோபி

சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் திரைப்பட தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குனர், கதாசிரியர், நடிகர் கோபி காந்தி புரட்சி கலைஞர் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய பின் விடுத்துள்ள இரங்கல் செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,  விஜயகாந்த் வசதியான குடும்பத்தில் பிறந்தவர், அவர் சொகுசு வாழ்வை விரும்பாதவர்.

சினிமா மீது ஆசையின் காரணமாக மதுரையிலிருந்து சென்னை வந்து கஷ்டங்களையும், அவமானங்களையும் கடந்து எம்.ஜி.ஆர் வழியை பின்பற்றி சமுக கருத்துகளை வலியுறுத்தி நடிகராக சாதித்து காட்டியவர் அரசாங்கம் மூலம் மக்களுக்கு நன்மை செய்ய தே.மு.தி.க இயக்கத்தை தோற்றுவித்து போராடினார்.

உடல் நலிவுற்றதால் முடியாமல் போனது, இறுதி மூச்சு வரை பணத்தை விரும்பாத சிறந்த மனிதர் இன்று மறைந்துவிட்டார். ஏழை, எளிய மக்களுக்கு பேரிழப்பாகும். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும் என வருத்தத்துடன் அவரது குடும்பத்தை சார்ந்த பிரேமலதா விஜயகாந்த், சண்முகபாண்டியன்,

விஜயப்ரபாகரன் ஆகியோருக்கு ஆறுதல் கூறி மற்றும் அவரின் ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் அவர் ஏற்படுத்திய தே.மு.தி.க இயக்கத்தை வலுவடைய செய்வதே அவருக்கு செய்யும் கைம்மாறாகும். அவரின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வணங்கி கொள்வதாக கோபி காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News