விஜயகாந்த் மறைவு: மௌன அஞ்சலி

எடப்பாடி நகர மன்ற கூட்டத்தில் மறைந்த விஜயகாந்திற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2023-12-29 13:49 GMT

எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய பின்னர் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் பாஷா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்  நகர்மன்ற முன்னாள் கவுன்சிலர் மதியரசன் மற்றும் தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக நிறுவனருமான நடிகர் கேப்டன் விஜயகாந்த் ஆகியோரின் மறைவிற்கும் இரண்டு நிமிடம் மனு அஞ்சலி செலுத்தப்பட்டது.  தொடர்ந்து எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளுக்கும் குடிநீர், சாலை, சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதிமுக கவுன்சிலர்கள் பல்வேறு எதிர் கேள்விகளை எழுப்பியதால் நகரமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டு பின்னர் சுமூகமாக கூட்டம் நிறைவு பெற்றது... இக்கூட்டத்தில் எடப்பாடி  நகராட்சி ஆணையாளர் முஸ்தபா உட்பட அதிமுக திமுக கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் என பலரும் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News