விஜயகாந்த் மறைவு -  பொதுமக்கள் அஞ்சலி

குமாரபாளையத்தில் விஜயகாந்த்க்கு  பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.;

Update: 2023-12-29 01:29 GMT

அஞ்சலி 

திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனருமான கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த், உடல்நலமில்லாமல் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவு செய்தி கேட்டு நகரில் உள்ள அனைத்து வார்டுகளில் தே.மு.தி.க. கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன. மாவட்ட பொருளர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி, தலைமையில் அனைத்து வார்டுகளில் விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

Advertisement

பள்ளிபாளையம் பிரிவு சாலையில் விஜயகாந்த் மறைவிற்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் சார்பில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினர். இதில் பங்கேற்ற பெரும்பாலோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதில் ஒன்றிய நிர்வாகி மணியண்ணன், தளபதி லயன்ஸ் சங்க தலைவர் சண்முகசுந்தரம், நில முகவர் சங்க நிர்வாகி பாண்டியன், ம.தி.மு.க. முன்னாள் நிர்வாகி விஸ்வநாதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா, விடியல் பிரகாஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News