விக்கிரவாண்டி : அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
விக்கிரவாண்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.;
Update: 2024-04-10 08:29 GMT
அங்காள பரமேஸ்வரி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், பெரியாயி அம்மனுக்கும் பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு படையலிட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதனை தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.