உரிமையோடு பேசி திட்டங்களை பெற்று தருவேன் - தாரகை கத்பர்ட்
.தமிழ்நாட்டில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.நாம் உரிமையோடு அரசிடமிருந்து திட்டங்களை பெற்றுக் கொள்ள முடியும் என விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் பிரசாரத்தின் போது தெரிவித்தார்.;
தாரகை கத்பர்ட் பிரசாரம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் விளவங்கோடு ஊராட்சி, முழுக்கோடு ஊராட்சி, அருமனை பேரூராட்சி பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால் சிங், மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் செல்ல சுவாமி, முன்னாள் எம். எல்.ஏ.லீமா ரோஸ் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.செல்லும் இடங்களில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அவருக்கு பூக்கள் கொடுத்தும் அணிவித்தும் சால்வை உற்சாகமாக வரவேற்று வருகின்றனர்.
அப்போது தாரகை கத்பர்ட் பேசியதாவது.விளவங்கோடு தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். குடிநீர், சாலை வசதிகள் மேம்பாடு செய்யப்படும்.தமிழ்நாட்டில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.நாம் உரிமையோடு அரசிடமிருந்து திட்டங்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்த தேர்தல் விளவங்கோடு சட்டமன்றத்திற்கு மட்டுமின்றி மக்களவைக்கும் சேர்த்து நடத்தப்படுகிறது. எனவே விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.