கிராமம் கிராமமாக சென்று எம்.எல்.ஏ., குறைகேட்பு
திருச்செங்கோடு எம்.எல்.ஏ., எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களின் குறைகளை கேட்டார்.;
திருச்செங்கோடு எம்.எல்.ஏ., எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களின் குறைகளை கேட்டார்.
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 85 கவுண்டம்பாளையம் கிராமத்தில் பொதுமக்களின் குறைகளை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கேட்டறிந்தார்,
85 கவுண்டம்பாளையம் பஞ்சாயத்தின் பகுதிகளான,கொத்தம்பாளையம் திம்ம ராவுத்தம்பட்டி அருந்ததியர் தெரு, நடுப்பாளையம், திம்ம ராவுத்தம்பட்டி குடித்தெரு மற்றும் பூவாள குட்டை ஆகிய பகுதிகளில் அடிப்படை தேவைகளை கேட்க திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர் ஈஸ்வரன் அவர்கள் நேரில் சென்றார், அப்போது அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி, தெரு விளக்கு வசதி, மற்றும் குடிநீர் வசதிகளை கேட்டனர், அதற்கு அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக ஆவணம் செய்வதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார், இந்த பொதுமக்கள் சந்திப்பின்போது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல்,ஒன்றிய செயலாளர் கார்த்தி, திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்