கண்மாய் கால்வாயை மூடி தார் சாலை அமைத்த அதிகாரிகள் - கிராம மக்கள் புகார்

ஆக்கிரமிப்புகளை அகற்றி தர பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-12-18 02:14 GMT

கண்மாய் கால்வாயை மூடி தார் சாலை அமைத்த அதிகாரிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வண்ணாரவயலில் உள்ள கண்மாய் மூலம் 150 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய்க்கு பொன்னியேந்தல் கண்மாய் பகுதியிலிருந்து வரத்துக்கால்வாய் உள்ளது. தற்போது இக்கால்வாய் மறைந்து விட்டது. மேலும் கண்மாய் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள புஞ்சை நிலங்களில் 27 பண்ணை குட்டைகள் உள்ளன. இதனால் இக்கண்மாய்க்கு தண்ணீர் வரத்து நின்றுவிட்டது. கண்மாய் வறண்டதால் 150 ஏக்கர் விலை நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து கண்மாய் நீர்வரத்து கால்வாயை மீட்கவும், பண்ணை குட்டைகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வண்ணாரவயல் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் வரத்து கால்வாயை அளவீடு செய்தபோது அந்த கால்வாயை மூடி பொன்னியேந்தலில் இருந்து வண்ணாரவயல் வரை ஊரக வளர்ச்சித் துறை சார்பில் தார் சாலை அமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சடைந்துள்ளனர். மேலும் சிலர் கால்வாயை ஆக்கிரமித்து பண்ணை குட்டை அமைத்துள்ளனர். ஒரு கிலோமீட்டருக்கு சாலை இருப்பதால் கால்வாயை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Similar News