சாலை வசதி வேண்டி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்

ஏற்காடு அருகே மாரமங்கலத்தில் 18 கிராம பழங்குடி மக்களின் பயன்பாட்டிலுள்ள 6ம் நம்பர் சாலையை தார் சாலையாக அமைக்குமாறு பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2024-01-31 09:36 GMT

ஏற்காடு மாரமங்கலம் ஊராட்சி18 கிராம பழங்குடி மக்களின் பயன்பாட்டில் உள்ள 6 - ஆம் நம்பர் சாலையை தார் சாலையாக அமைத்திட வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சார்பில் ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்காடு ஊராட்சி மாரமங்கலம் சிற்றூராட்சி பகுதியில் உள்ள கொட்டச்சேடு முதல் அரங்கம் வரையான 18 கிராம மக்களின் 35 ஆண்டு கோரிக்கையான ஆறாம் நம்பர் பீல்ட் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் என பல கட்டமாக போராடி வந்தனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் ஆறாம் நம்பர் சாலைக்கு பதிலாக ஏழாம் நம்பர் பீல்ட் சாலை அமைத்துள்ளது. இதனால் 18 கிராமங்களுக்கு பயன் அளிக்காமல் ஒரே ஒரு கிராமத்திற்கு மட்டும் அந்த சாலை பயனுள்ளதாக உள்ளது. சாலை அமைக்கும் இடம் எஸ்டேட் என்பதால் எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டுள்ளது என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியராக இருந்த கார்மேகம் அவர்கள் பொதுமக்களுக்கு பயன் தராத வகையிலும் எஸ்டேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் ஏழாம் நம்பர் பீல்ட் சாலையை அமைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் ஆறாம் நம்பர் சாலையை மாவட்ட நிர்வாகம் அமைத்து தர மறுக்கும் பட்சத்தில் வருகின்ற நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதோடு ஆதார் ரேஷன் அட்டைகளை மாவட்ட நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்க உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் செந்திட்டு ஊர் நிர்வாகி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை சிஐடியு மாவட்ட செயலாளர் கோவிந்தன் துவக்கி வைத்தார்.

இதில்தோட்ட சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோ மாரமங்கலம் பஞ்சாயத்து தலைவர் மாதையன் பஞ்சாயத்து கவுன்சிலர் வருதாயி ரவிக்குமார், சிபிஎம் தாலுகா செயலாளர் நேரு, உள்ளிட்டு பலர் பங்கேற்றனர். மேலும் உண்ணாவிரத போராட்டத்தை சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் தியாகராஜன் நிறைவுறையாற்றி முடித்து வைத்தார்.

Tags:    

Similar News