ஆக்ரமிப்பை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனுஅளித்த பொதுமக்கள்
ஆட்சியரிடம் ஆக்ரமிப்பு குறித்து கிராம மக்கள் மனு;
Update: 2024-01-30 09:34 GMT
கலெக்டரிடம் மனுஅளித்த பொதுமக்கள்
அரியலூர் மாவட்டம் அம்பாபூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் அரசுக்கு சொந்தமான ஏரி மற்றும் வண்டிபாதை ஆக்ரமிப்புகள், வடிகால் மற்றும் நீர்வரத்து ஆக்ரமிப்புகளை தனிநபர் ஆக்ரமித்து உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. எனவே அதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தபட்டு இருந்தது. இதனையடுத்து அந்த மனுவினை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கியது குறிப்பிடதக்கது.