பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்றது.

Update: 2024-03-24 06:02 GMT

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

 நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்புதிவு இயந்திர சேமிப்பு கிடங்கில், நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த வகையில் 70.செஞ்சி சட்டமன்ற தொகுதியில் உள்ள 304 வாக்குச்சாவடி மையங்களுக்கு 364 வாக்குப்பதிவு கருவிகள் (Ballot Unitt), 364 கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unitt), 395 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1,123 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 71.மயிலம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 267 வாக்குச்சாவடி மையங்களுக்கு 320 வாக்குப்பதிவு கருவிகள் (Ballot Unitt), 320 கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unitt), 347 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 987 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 72.திண்டிவனம் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 267 வாக்குச்சாவடி மையங்களுக்கு 320 வாக்குப்பதிவு கருவிகள் (Ballot Unitt), 320 கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unitt), 347 வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 987 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகம் என 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

Tags:    

Similar News