விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை விருது

விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை விருது வழங்கப்பட்டது.

Update: 2024-03-05 12:23 GMT

விருது வழங்கல் 

விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு லியோ என்ற அமைப்பு மூலம் "மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் கற்றல் சார்ந்த முயற்சியில் சிறந்து விளங்கும் கல்லூரி" விருதும், துறையின் டீனுக்கு "சிறந்த தலைவர்" விருதும் வழங்கப்பட்டுள்ளது.

மும்பையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் லியோ நிறுவனத்தின் இணை நிறுவனர் நவிஸ் ரெட்டி துறையின் டீனிடம் வழங்கினார். விருது பெற்றவர்களை பல்கலைக்கழகத்தின் வேந்தர் கணேசன், துணை தலைவர் அனுராதா கணேசன் மற்றும் துறை பேராசிரியர்கள், வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News