வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம்
சாதித்த மாணவி
தேசிய அளவில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சகத்தின் மூலம் "கலாஉத்சவ்" என்ற ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கலைப்பண்பாட்டு திருவிழா மத்திய மற்றும் மாநில அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போட்டியானது பள்ளி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படும்.
இந்த கல்வி ஆண்டிற்கான நடன போட்டியான செவ்வியல்- பரதநாட்டியம் பிரிவில், நாகர்கோவில், சுங்கான்கடை வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 9-ம் வகுப்பு மாணவி அதிதி சந்திரசேகர் கன்னியாகுமரி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாநில அளவில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். இதன் மூலம் அவருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கி கவுரவித்தார்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அதிதி சந்திரசேகர் நவம்பர் மாதம் சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான நடன போட்டியில் பங்கேற்க உள்ளார். வின்ஸ் கல்விநிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் பரிசு வழங்கி கவுரவித்தார்.