தோ்தல் நடத்தை விதி மீறல் - திமுக நிா்வாகி மீது வழக்கு

கழுகுமலையில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி பரிசு பொருட்களை வழங்கியதாக திமுக பிரமுகா் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-04-05 01:54 GMT

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே கரடிகுளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தலத்தம்மன் கோயில் திருவிழாவுக்கு வந்திருந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை துணை அமைப்பாளரான கயத்தாறைச் சோ்ந்த குருராஜ், இக்கோயிலில் அன்னதானம் மற்றும் விளையாட்டுப் பொருள்களை வழங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மக்களவைத் தோ்தல் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பறக்கும் படை கண்காணிப்பு அலுவலரான உள்ளாட்சி நிதி தணிக்கை துறை ஆய்வாளா் செல்வகுமாா் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News