தருமபுரியில் மனித உரிமை மீறல்: ஆட்சியரிடம் புகார் மனு

தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது;

Update: 2024-02-19 11:59 GMT

மனு அளிக்க வந்தவர்கள் 

தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது இந்த நிகழ்வில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்குட்பட்ட சிக்கமாரண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகன் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில் சிக்கமாரண்டஅள்ளி ஊர்கவுண்டராக காந்தன் மகன் இலட்சுமணன் என்பவர் இருந்து வருகின்றார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென்று மந்திரிகவுண்டர் முருகேசன் ஆகிய இருவரும் என் மீது முன்பகை கொண்டு சுயநலமாக நேரடியாக என்னிடம் கேட்காமலே நான் அவர்களுக்கு அடிமையாக இருக்கனும்போல் நினைக்கிறார்கள். என்னை பழிவாங்கும் எண்ணத்தோடு சிக்கமாரண்டஅள்ளி கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். நானும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான்.

Advertisement

ஆனால் என் மீதும் தனிப்பட்ட வாழ்க்கையில் துன்புறுத்தல் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக அனைத்து வீடுகளுக்கும் முனியப்பன் எல்லோருடைய வீட்டுக்கும் சென்று என் குடும்பத்தாரிடம் ஊர் பொதுமக்கள் யாரும் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள். எனவே மனதளவில் ஆபத்தை உருவாக்கி வாழ்க்கையில் பயத்தை ஏற்படுத்த எங்களது உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் ஒரு துன்பத்தை கொடுத்துள்ளார்கள்.

இலட்சுமணன் மற்றும் முருகேசன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் என்னை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து மனித உரிமை மீறலில் ஈடுப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News