வாக்களிப்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் நடைப்பயணம்

நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நடைபயணம்.;

Update: 2024-03-09 17:45 GMT

நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நடைபயணத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்து, தானும் நடைபயணத்தில் கலந்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள தனியார் (சேது) பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் தானும் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டு சுமார் 3 கிலோ மீட்டர் வரை நடந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Advertisement

இந்த பேரணியில் கலந்துகொண்ட மாணவர்கள் "நமது வாக்கு நமது உரிமை"- "வாக்களிப்பது நமது கடமை-"நீ காட்டும் நல்லவரை அரியணையில் வை, அதற்காகவே உன் ஆட்காட்டி விரலில் வைக்கப்படுகிறது மை" என்பன போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வாக்களிப்பதன் அவசியத்தை கோஷங்களாக முழங்கி சென்றனர். இந்த பேரணியானது மந்திரிஓடை பகுதியில் தொடங்கி பஜார், பேருந்து நிலையம், முக்குரோடு, வழியாக கள்ளிக்குடி சாலையை அடைந்து நான்குவழிச்சாலை சந்திப்பில் நடைபயணம் நிறைவு பெற்றது.

முன்னதாக மாணவர்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர் மாணவர்கள் தங்கள் கடமைகளில் ஒன்றாக வாக்களிப்பதை மனதில் கொண்டு நூறு சதவிகித வாக்களிப்பிற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் என்றும் அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News