விருதுநகர் கலெக்டர் அதிரடி உத்தரவு

அனைத்து வாகன புகை பரிசோதனை நிலையங்கள் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-05-07 14:42 GMT

விருதுநகர் கலெக்டர்

 வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிப்பதை கட்டுக்குள் வைக்க மாநிலம் முழுவதும் 534 வாகன புகை பரிசோதனை நிலையங்கள் இயங்கி வருகின்றன. வாகனங்களின் மூலம் வெளியிடப்படும் புகை அளவு அதிகரிக்கும் காரணத்தால் காற்று மாசுபாடு ஏற்பட்டு அதனால் நுரையீரல் தொடர்பான பாதிப்புகள் பொதுமக்களிடையே ஏற்படுகிறது. இதனை கட்டுக்குள் வைக்க மாநிலம் முழுவதிலும் 534 வாகன புகை பரிசோதனை மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இயங்கி வருகின்றன.

புகை பரிசோதனை மையங்கள் தொடர்பான புகார்கள் வந்ததை அடுத்து, கடந்த மாதம் 13-ஆம் தேதி மாநிலம் முழுவதும் வாகனபுகை பரிசோதனை மையங்கள் திடீர் தணிக்கை செய்யப்பட்டன. வாகன புகை பரிசோதனை மையங்களின் செயல்பாட்டினை மேலும் மேம்படுத்தவும், புகார்களுக்கு இடமளிக்காத வகையில் தொழில்நுட்பங்களைப் புகுத்தவும் போக்குவரத்துத் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகரில் 5 புகை பரிசோதனை மையங்களும், அருப்புக்கோட்டையில் 1, சிவகாசியில் 4, திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் பகுதியில் 4 ஆக மொத்தம் 14 வாகன புகை பரிசோதனை மையங்கள் உள்ளன. புதிய தொழில்நுட்பத்தின் படி அந்தந்த வாகன புகை பரிசோதனை மையத்திற்கென தனிப்பட்ட அலைபேசி உரிமதாரரால் பயன்படுத்தப்படும். அந்த அலைபேசியில் இந்த PUCC 2.0 Version App-ஐ நிறுவி இயக்க வேண்டும்.

இந்த புதிய Version GPS வசதியுடன் கூடியதாகும். இந்த செயலி நிறுவப்பட்ட அலைபேசி தொடர்புடைய வாகன புகை பரிசோதனை மையத்திலிருந்து 30 மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே செயல்படும். அதைப்போலவே சோதனை செய்யப்படும் வாகனங்கள் அந்த புகை பரிசோதனை மையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்யப்படுவதை துல்லியமாக காட்டும் புவியிடக் குறியீடு (GPS enabled Photo with Latitude, Longtitude) இருப்பதனால் சோதனை மையத்திற்கு வாகனங்களை கொண்டு வராமலேயே புகை பரிசோதனையை இனி செய்ய இயலாது.

எனவே, மேற்கண்ட முக்கிய அம்சங்கள் உள்ளதால் இந்த புதிய தொழில்நுட்பத்தை (PUCC 2.0 version) அனைத்து வாகன புகைப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத்தவறும் வாகன புகை பரிசோதனை மையங்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News