அரசு பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்றவர் பலி
சாலையில் நடந்து சென்றவர் மீது அரசு பேருந்து மோதி பலி.;
Update: 2024-03-19 19:39 GMT
அரசு பேருந்து மோதி விபத்து
விருதுநகர் மாவட்டம் மீசலூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரிச்சாமி. இவர் ஆடு வியாபாரம் செய்து வரும் நிலையில் கடந்த 14ஆம் தேதி வியாபாரத்தை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு விருதுநகர் -சிவகாசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ராஜா என்ற நபர் ஓட்டி வந்த அரசு பேருந்து மாரிச்சாமி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மாரிச்சாமியின் மனைவி அன்னலட்சுமி அளித்த புகாரியின் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.