அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்கப்படும் மூலப்பொருள் வைத்திருந்தவர் கைது
பட்டாசு ஆலை வெடிவிபத்தை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை;
பட்டாசு திரி தயாரித்தவர் கைது
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் நாட்டார்மங்கலம் சாலையில் அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்கப்படும் மூலப்பொருள் வைத்திருந்த மாரிகாளை என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிபவர் சுப்புலட்சுமி. இவர் ஆமத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது நாட்டார்மங்கலம் சாலையில் அனுமதியின்றி தகர செட்டில் கட்டிங் செய்யப்பட்ட மிஷின் திரியை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆமத்தூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்ததை அடுத்து மாரிக் காளை என்பவர் மீது வழக்கு செய்து அவரிடம் இருந்த ஆயிரம் திரியை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்