விருதுநகரில் 12 காவல்துறை வாகனங்கள் பொது ஏலம் விட அறிவிப்பு

ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க அழைப்பு;

Update: 2024-02-18 19:13 GMT
ஏலத்திற்கு வரும் காவல்துறை வாகனங்கள்

விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் வரும் 23ஆம் தேதி 12 காவல்துறை வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட முதிர்ந்த நிலையில் உள்ள கழிவு செய்யப்பட்ட 12 காவல் வாகனங்களை பொது ஏலத்தில் விட விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். அதன்படி வரும் 23ஆம் தேதி காலை 8 மணி அளவில் விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெறும் எனவும் பொது ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புவோர் ஆதார் அட்டை நகலுடன் ரூபாய் 2000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டின் நம்பர் உள்ளவர்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள இயலும் எனவும் ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகை மற்றும் அதற்கான ஜிஎஸ்டி வரும் 23ஆம் தேதியே செலுத்த வேண்டும் என எஸ்பி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News