நுண்ணுரமாக்கும் மையத்தினை பார்வையிட்டு ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் குப்பைகளை தரம் பிரித்து நுண்ணுரமாக்கும் மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-05-08 10:12 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் குப்பைகளை தரம் பிரித்து நுண்ணுரமாக்கும் மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 4-வது மண்டலத்திற்குட்பட்ட 56 வது வார்டு தென்னம்பாளையம் பகுதி சந்தப்பேட்டையில் உள்ள மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து நுண்ணுரமாக்கும் மையம் மற்றும் உயிர் எரிபொருள் மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகர நல அலுவலர் கௌரி சரவணன் உட்பட பலர் உள்ளனர்...