திருப்பூருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை: அமைச்சர் நேரு ஆய்வு

திருப்பூருக்கு வருகின்ற 11ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி விழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

Update: 2024-02-09 11:15 GMT

அமைச்சர் நேரு ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் நான்காம் குடிநீர் திட்டம் மாநாட்டு அரங்கம் மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் ஆகியவற்றை நாளை மறுதினம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து ஐந்தாயிரம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவதாக எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்த கேள்விக்கு திட்டம் யார் தொடங்கப்பட்டாலும் இது அரசின் தொடர் பணி ,திட்டம் தொடங்கியது அவர்களாக இருந்தாலும் முறையாக அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணியை நடைமுறைக்கு கொண்டு வந்தது தளபதி தலைமையிலான திமுக அரசு கோவை பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை அவர்கள் அறிவித்தார்கள் ஆனால் நிலம் கையகப்படுத்தி நிதி ஒதுக்கீடு செய்து அதனை அமல்படுத்தியது திமுக அரசே. அத்திக்கடவு அவிநாசி திட்டம் தாமதப்படுத்தப்படுவதில்லை ,

விவசாயிகள் வாய்க்காலில் சிமெண்ட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் . அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை தராமல் இழுத்தடிப்பு செய்துள்ளனர்.

அதற்குண்டான பணிகள் நடைபெற்று வருவதாகவும் நாடாளுமன்ற தேர்தல் முடிவு அடைந்த பின்பு முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் பேட்டியளித்தார்.

Tags:    

Similar News