பழங்குடியினர் செயற்பாட்டாளருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
குடியரசுதின விழாவில் மக்களுக்காக சிறப்பாக நற்பணியாற்றியதற்காக பழங்குடியினர் செயற்பாட்டாளர் வக்கீல் அகத்தியனுக்கு விருது வழங்கப்பட்டது.;
Update: 2024-01-27 09:29 GMT
பழங்குடியினர் செயற்பாட்டாளருக்கு பாராட்டு
விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத் தில் நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில் மக்களுக்காக சிறப்பாக நற்பணியாற்றியதற்காக பழங்குடியினர் செயற்பாட்டாளர் வக்கீல் அகத்தியனுக்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி, சமூக செயல் பாட்டாளர் பாராட்டு சான்றை வழங்கி பாராட்டினார். அப்போது விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச், கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ் வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஹரிதாஸ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கலைமாமணி, ஊரக வளர்ச் சித்துறை அதிகாரி சரவணன், நகராட்சி ஆணையர் ரமேஷ் ஆகி யோர் உடனிருந்தனர். இதேபோல் கடவம்பாக்கம் மணி, ரபேல் ராஜ் கவசம், லூசினா ஆகியோருக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது.