விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் விமரிைசயாக நடைபெற்றது.

Update: 2024-04-22 11:36 GMT

விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் விமரிைசயாக நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ம் நாளான 19-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு மீனாட்சி அம்பிகைக்கு பட்டாபிஷேகம், காலை 6 மணிக்கு அம்மன் பூப்பல்லாக்கில் எழுந்தருளல், மாலை 5 மணிக்கு சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு அபிஷேகம் நடந்தது.

இரவு 8 மணிக்கு மேல் சுவாமி நடராஜர் பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று முன்தினம் இரவு மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் 10-ம் நாளான நேற்று மாலையில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

மாலை 4 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது. தேர் ரதவீதிகளை சுற்றி மாலை 6 மணியளவில் நிலையை வந்தடைந்தது. விழாவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. விழாவில், 23-ஆம் தேதி தீர்த்தவாரியும், 24-ஆம் தேதி ஊஞ்சல் வைபவமும் நடக்கிறது.

Tags:    

Similar News