ஏழை பெண்ணுக்கு உதவிய தன்னார்வலர்கள்
ஏழை பெண்ணுக்கு தன்னார்வலர்கள் உதவினர்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-17 15:28 GMT
தன்னார்வலர்கள் உதவி
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே ரெட்டியபட்டியில் சமூக ஆர்வலர் பால் தாமஸ் தலைமையில் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைத்த நிதி மூலம் ஏழை பெண்ணிற்கு இலவசமாக கொடுக்கப்பட்ட சிறுதானிய அங்காடி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது . சாணார்பட்டி அருகே நொச்சிஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பால் தாமஸ்.
இவர் மரம் நடுதல், கொரோனா பாதிப்பு காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்நிலையில் கவராயப்பட்டியை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் ஏழ்மை நிலையில் உள்ள மரியஜோதி என்ற பெண்ணிற்கு இலவசமாக சிறுதானிய அங்காடியை அமைத்துக் கொடுத்துள்ளனர்.