மாணவர்கள் உட்பட பலருக்கும் வாந்தி, மயக்கம்; மக்கள் அச்சம்

ஒசூர் அருகே பள்ளி மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2024-03-07 01:56 GMT

ஒசூர் அருகே பள்ளி மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

ஒசூர் அருகே பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதி: தொடர்ந்து அதிகரித்து வருவதால் கிராம மக்களிடம் பீதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி கிராமத்தில் 100க்கும் மேற்ப்பட்ட வீடுகள் உள்ளநிலையில் கடந்த ஒரு வாரமாக கெலவரப்பள்ளி கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அடுத்தடுத்து வாந்தி,பேதி, மயக்கம் காரணமாக அவதிக்குள்ளாகி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பாதிப்பிற்குள்ளானவர்கள் நிற்கக்கூட பெலன் இல்லாத நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதால் தினந்தோறும் உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், என்ன காரணம் என்று தெரியாமல் கிராம மக்கள் பீதியில் உள்ளனர் மருத்துவக்குழுவினர் கிராமத்தை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கி காரணத்தை கண்டறிய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

Similar News