நாமக்கல் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் ஆதரவாக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.;

Update: 2024-04-14 14:08 GMT

திமுக கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இராசிபுரம் நகர ஒன்றியக் குழு மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இந்தியா கூட்டணியின் ஆதரவு பெற்ற நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்யுமாறு,

இராசிபுரம் நகர புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை பகுதிகளில் விவசாயிகள், பயணிகள்,வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடையே இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி அடங்கிய துண்டறிக்கையை வழங்கி, வாக்கு சேகரிக்கும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த முன்னாள் நாமக்கல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முன்னாள் கவுன்சிலர் நகர வளர்ச்சி மன்ற தலைவர் நெப்போலியன் என்கிற வி.பாலு, தலைமையில்,

Advertisement

  பல இடங்களில் வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்வில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலார் மணிமாறன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் நகரச் செயலாளர் பிடல் சேகுவேரா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரப் பொருளாளர் சலீம், நகர துணைசெயலாளர் கிருஷ்ண மூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜா,

பயாஸ்,வேம்பு திவிக வெண்ணந்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் ராமச்சந்திரன், 16 வது வார்டு திமுக இளைஞர் அணி கார்த்திக் , 6 வது வார்டு திமுக தங்கம் ,மற்றும் ராஜேஷ், சிரஞ்சீவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News