அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர்
நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியிலே மத நல்லிணக்கம் உருவாக அதிமுக விற்கு வாக்களிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி,
நடக்க இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் மத்தியிலே அதிமுகவின் கரம் ஓங்குவதற்கு,மத்தியிலே மத நல்லிணக்கத்தை உருவாக்க,சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு இரட்டை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்
.இந்த நிகழ்ச்சி தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியாக தான் இருக்கும். கொடுக்கின்ற ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருந்தது.வேட்டியை மடித்துக் கொண்டு தூத்துக்குடி வெள்ளத்தில் முதல் ஆளாக களம் இறங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி.திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.திமுக ஆட்சிக்கு வந்து தாலிக்கு தங்கம் கொடுக்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தை எல்லாம் நிறுத்திவிட்டனர் .
10 பேரிடம் கேட்டால் 8 பேர் எடப்பாடி ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என கூறுகிறார்கள்.மக்கள் சிந்திக்க துவங்கி விட்டனர்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஏழைகளுக்காக துவங்கப்பட்ட இயக்கம். பட்டாசு தொழிலாளர்கள் ,பட்டாசு உரிமையாளர்கள், விவசாயிகள் யாருக்கு பிரச்சினை என்றாலும் எடப்பாடியை பார்க்கலாம் பிரச்சனை தீர்த்து வைப்பார்.
திமுகவிற்கு ஓட்டு போட்ட மக்கள் தவிக்கிறார்கள். விலைவாசி உயர்ந்து விட்டது. மின் கட்டண உயர்வு என அனைத்தும் உயர்ந்துவிட்டது என பேசினார்.