வாக்காளர் விழிப்புணர்வு போட்டி அரசு பள்ளி மாணவி சிறப்பிடம்!

வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் விராலிமலை அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றார். அவருக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ விருது வழங்கி பாராட்டினார்.

Update: 2024-01-30 07:04 GMT

வாக்காளர் விழிப்புணர்வு போட்டி அரசு பள்ளி மாணவி சிறப்பிடம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் விராலிமலை அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றார். மாணவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு போட்டியை தேர்தல் ஆணையம், வட்டாரம், மாவட்ட, மாநில அளவில் அண்மையில் நடத்தியது.போட்டியை பொருத்தவரை, வட்டார அளவில் தேர்வானவர்கள், மாவட்ட அளவிலும், அதில் சிறப்பிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஏஞ்சல் வர்ஷா விழிப்புணர்வு வாசகம் போட்டியில் பங்கேற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து மாநில அளவில் பத்தாம் இடம் பிடித்தார். அவருக்கு சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ விருது வழங்கி பாராட்டினார்.இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயந்தி கூறியது: தேர்தல் விழிப்புணர்வு வாசகம் எழுதும் போட்டியில் மாநில அளவில் பத்தாவது இடத்தை பிடித்த எங்கள் பள்ளி மாணவியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ பாராட்டிய நிகழ்வு பள்ளிக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
Tags:    

Similar News