இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

நாடாளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் சேலம், பொன்னமாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் கல்லூரியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.

Update: 2024-03-23 04:39 GMT

வாக்காளர் விழிப்புணர்வு

நாடாளுமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் சேலம், பொன்னமாபேட்டையில் உள்ள சக்தி கைலாஷ் கல்லூரியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கலெக்டர் பிருந்தாதேவி கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுடன் வாக்களிப்பதன் அவசியம், வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை. இளம் வாக்காளர்களாகிய நீங்கள் (மாணவிகள்) 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். அப்போது மாணவிகளுடனான கலெக்டர் கலந்துரையாடல் ருசிகரமாக இருந்தது. அப்போது மாணவி ஒருவர் எழுந்து முதன் முதலில் வாக்களிக்க உள்ளேன். எனவே அந்த நாளை எதிர்பார்த்துக்கொண்டு உள்ளேன் என்று கலெக்டரிடம் சிரித்தபடி கூறினார். தொடர்ந்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:- வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சட்டமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளன. இளம் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாக்கு அளிப்பது ஒவ்வொருவரின் கடமை. எனவே மாணவி, மாணவிகள் தவறாமல் வாக்களிப்பதோடு, மற்றவர்களுக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் அனைவரும் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி 100 சதவீதம் வாக்களித்து மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் ஜெயந்தி, பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News