கல்லூரி மாணவ மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி !

கல்லூரி மாணவ மாணவிகளின் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-28 07:33 GMT

 வாக்காளர் விழிப்புணர்வு

நாடாளுமன்றத் தேர்தல் 2024 நடைபெற உள்ள சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் பொதுமக்களிடையே வாக்காளர்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என் வாக்கு என் உரிமை என்பன உள்ளிட்ட வாசங்களை பொதுமக்களிடையே எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இயங்கி வரும் வித்ய விகாஸ் கல்லூரியின் சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை நாமக்கல் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் அருண் பானர்ஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.  திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு துவங்கிய பேரணி புதிய பேருந்து நிலையம் சேலம் ரோடு பழைய சேலம் சாலை கிழக்கு ரத வீதி தெற்கு ரத வழியாக பயணியர் மாளிகையை அடைந்தது வழி நெடுகிலும் எனது வாக்கு விற்பனைக்கு அல்ல வாக்களிப்பது ஜனநாயக கடமை என் வாக்கு என் உரிமை என்பன போன்ற பல்வேறு முழக்கங்களை எழுப்பிய படி மாணவ மாணவிகள் வந்தனர் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கக் கூடாது 100% வாக்களிப்பை வாக்காளர்கள் வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி திருச்செங்கோடு வட்டாட்சியர் விஜயகாந்த் திருச்செங்கோடு வித்ய விகாஸ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிங்காரவேல் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News