வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் மூத்த வாக்காளர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்.

Update: 2024-01-26 07:51 GMT

விழிப்புணர்வு பேரணி 

நாகப்பட்டினம் மாவட்டம் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரியில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ்,  கொடியசைத்து துவக்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது. இந்திய அரசியலமைப்பின்படி இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டு ஆண்டு தோறும் ஜனவரி 25-ம் தேதி வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் விதமாக 2011-லிருந்து தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி நாடு முழுவதும் வாக்குச்சாவடிகளில் 18 வயதை எட்டும் அனைத்து தகுதியான வாக்காளர்களையும் அரசாங்கம் அடையாளம் காண வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன் நோக்கமாக புதிய வாக்காளர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 25.01.2024 இன்று இந்தியா முழுவதும் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த 14 வது தேசிய வாக்காளர் தினம் நமது மாவட்டத்திலும் இன்று சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதன் நோக்கம் இளம் வாக்காளர்களை தேர்தலில் வாக்களிப்பதற்கும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து முழு ஆர்வத்தோடு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வாக்காளர்களும் 14 வது தேசிய வாக்காளர் தினத்தில் "வாக்களிப்பதே சிறந்தது. நிச்சயம் வாக்களிப்பேன்" "Nothing like voting, I vote for sure" नखंल कÚयालल्ला कलक्रंक्रीलंकाले नही कागذؤؤ பின்பற்றவேண்டும்.

  மாணவர்களாகிய நீங்கள் எதிர்காலத்தின் வாக்காளர்களாக இருப்பதால் உங்களின் வாக்குகளின் வலிமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் பெருமையை உணர்ந்து கொள்ளவேண்டும். வாக்களிப்பதில் அலட்சியமாக இருக்க கூடாது. உங்களால் இயன்றவரை வாக்களிப்பதன் அவசியத்தை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும். தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளான சுவரொட்டி வரைதல், லெட்டர் ரைட்டிங், பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, ஸ்லோகன், நாடகம், கதை, கட்டுரை. நடனப்போட்டிகளில் கலந்துகொண்டு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறந்த ஜனநாயகத்தை உருவாக்க வேண்டும்.

தேர்தல் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக 1950 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கோலப்போட்டியினை பார்வையிட்டும், வாக்காளர் விழிப்புணர்வு குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூத்த வாக்காளர்களை பொன்னாடை அணிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  கௌரவித்தார். இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பேபி, வருவாய் கோட்டாட்சியர்(பொ) தகண்ணன். வட்டாட்சியர் திரமேஷ். வட்டாட்சியர்(தேர்தல்) சாந்தி, திட்ட இயக்குநர்(மகளிர் திட்டம்) .முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள்

Tags:    

Similar News