மேயர் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.;
Update: 2024-01-25 08:19 GMT
உறுதிமொழி ஏற்பு
திருச்சி மாநகராட்சி சார்பில், மேயர் மு.அன்பழகன் தலைமையில் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் விதமாக வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது. உறுதி மொழியை மேயர் வாசிக்க, அதனை மாநகராட்சி அலுவலர்கள் திரும்பக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, நகரப் பொறியாளர் பி.சிவபாதம், துணை ஆணையர் டி.நாராயணன், உதவி ஆணையர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.