வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்காளர்கள்
கள்ளகுறிச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் ஆர்வமாக வாக்கினை பதிவு செய்தனர்.;
Update: 2024-04-20 05:49 GMT
வாக்களிக்க ஆர்வம் காட்டிய வாக்களர்கள்
சங்கராபுரம் நகரில் 18 வயது முடிந்த இளம் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர். சங்கராபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 18 வயது முடிந்த ஆண், பெண் வாக்காளர்கள் நேற்று காலையிலேயே ஓட்டுச்சாவடிக்குச் சென்று தங்கள் ஓட்டுகளை ஆர்வமுடன் பதிவு செய்தனர். அதே போல் 80 வயதைக் கடந்த முதியவர்களும் சக்கர நாற்காலியில் வந்து தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.