சங்கராபுரம் பஸ் நிலையத்தில் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு !
சங்கராபரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-05 05:04 GMT
விழிப்புணர்வு
சங்கராபரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் சங்கராபுரம் பேருராட்சி சார்பில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தி காய்கறி முலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அகிலா தலைமை தாங்கினார். பேருராட்சி செயல் அலுவலர் ராஜலட்சுமி, இளநிலை உதவியாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர். காய்கறி கண்காட்சி மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 100 சதவித வாக்குபதிவை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.