தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் விழிப்புணர்வு
கடலூர் மாவட்டம் , தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் வாக்களிப்பு விழிப்புணர்வு நடைப்பெற்றது.;
Update: 2024-03-25 05:04 GMT
வாக்களிப்பு விழிப்புணர்வு
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-னை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கிருஷ்ணசாமி வித்யா நிகேதன் பள்ளி சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், மகளிர் திட்ட இயக்குநர் ஸ்ருதி, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி (பொ) ஆகியோர் உள்ளனர்.