100 சதவீதம் வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி

விருதுநகரில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-28 04:08 GMT
100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

மக்களவைத் தேர்தல்- 2024 யை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி “தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” என்ற தலைப்பில் அரசு அலுவலர்கள், தூய்மைகாவலர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்து, வாக்காளர் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

மக்களவைத் தேர்தல்- 2024 நடைபெறயுள்ளதையொட்டி வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும் நாள்தோறும் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் வாக்காளர்களிடையே 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பெறாமல் நியாயமான முறையில் வாக்களிப்பதை வலியுறுத்தியும் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். பின்னர், அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான துண்டுப்பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த பேரணியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண், பெண் வாக்காளர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்களிப்பது நமது உரிமை, கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும். நம்மை ஆள்பவரை நாமே தீர்மானிக்க வேண்டும். ஜனநாயக கடமையை நாம் ஆற்ற வேண்டும் என்ற வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்று, விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும், விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கியும், விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றும், நேர்மையான, நியாயமான, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News