வடலூர்: வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பு
கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சியில் வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.;
Update: 2024-03-28 12:03 GMT
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூர் நகராட்சி பகுதியில் வர்த்தக சங்க நிர்வாகிகளை குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார் தலைமையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் கை சின்னத்தில் வாக்கு கேட்டு அனைத்து வர்த்தக சங்க நிர்வாகிகளுக்கும் சால்வை அணிவித்து ஆதரவு கேட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் வடலூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் நகர மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் வடலூர் நகர திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.