வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி வழி ஒதுக்கீடு

புதுக்கோட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி வழி ஒதுக்கீடு செய்து பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது.

Update: 2024-03-22 09:09 GMT

ஐ.சா. மெர்சி ரம்யா

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் கணினி வழியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் கருவி (விவிபேட்) ஒதுக்கீடு செய்து, பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. ஆட்சியரக வளாகத்திலுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பு வைப்பறையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்டத்தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஐ.சா. மெர்சி ரம்யா தலைமை வகித்து இதைத் தொடங்கி வைத்தார். அப்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர். சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும் மின்னணு இயந்திரங்களின் எண்களின் பட்டியலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டன. அப்போது,மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ். வெங்கடாசலம், தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ. சோனை கருப்பையா ஆகியோரும் உடனிருந்தனர்.
Tags:    

Similar News