வயலோக புனித அடைக்கல அன்னை மாதா தேர் திருவிழா
வயலோக புனித அடைக்கல அன்னை மாதா தேர் திருவிழா நடைபெற்றது.
விராலிமலை அன்னவாசல் அருகே பழைமையான புனித அடைக்கல அன்னை ஆலய தேர் திருவிழா இரவு நடைபெற்றது. இந்த ஆலய தேர் திருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி தொடங்கி தினமும் மண்டகப்படி உபயதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜையும் தேர் பவனியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இரவு நடைபெற்றது.
புனித அடைக்கல அன்னை எழுந்தருளிய மின்னொளி தேர் செண்டை மேளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து புனித அடைக்கல அன்னை ஆலயத்தை அடைந்தது. விழாவில் பங்குத்தந்தை ஜான் செல்வராஜ் தலைமையில் திவ்ய கருணை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து இரவு இசை நிகழ்ச்சியுடன் கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது. விழாவில் சர்வ மதத்தினரும் கலந்து கொண்டது மத நல்லிணக்கத்தை உணர்த்துவதாக இருந்தது. ஏற்பாடுகளை புனித தொன்போஸ்கோ இளைஞர்கள் செய்தனர்.