ஜல்லிக்கட்டு போட்டி நடத்த எதிர்ப்பு - காத்திருப்பு போராட்டம்

திருப்பத்தூர் அருகே ஜல்லிக்கட்டு போட்டி நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2024-05-26 12:36 GMT

காத்திருப்பு போராட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சி கிராமத்தில் இரு குழுக்களாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வந்தனர். அனைவரும் ஒன்றாக போட்டியை நடத்த வேண்டும் என ஒரு பிரிவினர் கடந்த வாரம் நீதிமன்றத்திலும், மாவட்ட நிர்வாகத்திடமும், வருவாய்த்துறையினரிடமும் மனு அளித்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் தற்சமயம் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க கால அவகாசம் குறைவாக உள்ள காரணத்தினால் வரும் காலங்களில் சேர்ந்து நடத்துவது குறித்து முடிவெடுக்கலாம் என்றும், எனவே இந்த ஆண்டு வழக்கம் போல் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திக் கொள்ளட்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத மற்றொரு பிரிவினர் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் மைதானத்தின் திடீரென காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற சில மணி நேரங்களே உள்ள நிலையில் இப்போராட்டத்தால் பிரச்சனை ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருவாய் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News