பெரியகுளம் மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டம்

பெரியகுளத்தில் ஏழு அம்ச கோரிக்கைகளை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-28 09:49 GMT

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

தேனி மாவட்டம் பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் QPMS என்ற நிறுவனத்தின் மூலம் மருத்துவமனை துப்புரவு பணிகள், சமையல் உதவியாளர், பாதுகாவலர்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெண்கள் உட்பட என்பது நபர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் 609 ரூபாய் வழங்க உத்தரவிட்டும், நிர்வாகம் 285 ரூபாய் மட்டுமே வழங்கி வருவதாகவும், தமிழ்நாடு தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்றும், ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை, உள்ளிட்ட தொழிலாளர் நலச் சட்டங்களின்படி அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும் எனவும், கொரோனா பொது முடக்கத்தின் போது அனைத்து ஒப்பந்த பணியாளர்களுக்கும் தமிழக அரசு ஊக்க தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டும்,

இதுவரையில் வழங்காத, கொரோனா காலத்தில் பணியின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த 2 லட்சம் ரூபாய் இதுவரையில் வழங்கப்படவில்லை உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News